சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்து கடந்த 12ம் தேதி வெளியான லிங்கா படம் கேரளாவில் வெளியிடப்பட்டது. மொத்தம் 50 தியேட்டர்களில் வெளியிட்டார்களாம். ஆனால் மூன்றே நாட்களில் 9 தியேட்டர்களில் இருந்து லிங்காவை எடுத்து விட்டு வேறு படங்களை போட்டு விட்டார்களாம். காரணம், அந்த தியேட்டர்களில் லிங்காவை திரையிட்ட நாளில் இருந்தே மக்கள் கூட்டம் இல்லையாம்.
மேலும், தற்போது ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களிலும் ஓரிரு நாட்கள் மட்டுமே கலெக்சன் இருந்ததாம். அதையடுத்து, பெயரளவுக்குத்தான் ஓட்டிக்கொண்டிருக்கிறார்களாம். அந்த வகையில், லிங்காவை 11 கோடி கொடுத்து கேரளாவில் வெளியிடும் உரிமையை வாங்கிய விநியோகஸ்தருக்கு இதுவரை 5 கோடி வரைதான் கைக்கு கிடைத்துள்ளதாம். எப்படியாவது போட்ட காசையாவது எடுத்து விட வேண்டும் என்பதற்காக தற்போது பப்ளிசிட்டிகளை முடுக்கி விட்டுள்ளார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி