ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளான கினியா, லைபீரியா, மாலி மற்றும் சியாரா லியோனில் எபோலா வைரஸ் நோய் பரவி ஏராளமான உயிர்களை பலிவாங்கி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் திணறி வருகிறது. இதற்கிடையே இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதுவரை இந்த நோய்கு 6841 பேர் இறந்துள்ளதாகவும், 18 ஆயிரத்து 464 பேர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. லைபீரியாவில் 3290 பேர் இறந்துள்ள நிலையில் 7797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சியாரா லியோனில் 2033 பேர் உயிரிழந்துள்ளனர். 8273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கினியாவில் 2394 பேர் இறந்த நிலையில் 1518 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முதன்முதலாக மத்திய ஆப்பிரிக்க கிராமங்களில் தென்பட்ட இந்த நோய், மேற்கு ஆப்பரிக்காவில் தீவிரமாக பரவி இத்தனை உயிரை பலிவாங்கியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி