December 16, 2014

செய்திகள், திரையுலகம்

‘ஐ’ திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ்!…

சென்னை:-விக்ரம்–எமிஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள திரைப்படம் ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டுக்குப் பிறகு, படம் எப்போது ரிலீசாகும் என்று திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். முதலில் தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் இறுதி கட்ட பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிபோனது. அதன்பிறகு பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பொங்கல் அன்று ‘என்னை அறிந்தால்’ படமும் ரிலீசாகவுள்ளது. இதனால் இவ்விரு படங்களுக்கும் மோதல் வரும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ‘ஐ’ படத்தை ஜனவரி 9ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இப்படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

செய்திகள், திரையுலகம்

நடிகர் விஜய் ரசிகரால் கே.வி.ஆனந்திற்கு வந்த தலைவலி!…

சென்னை:-டுவிட்டரில் இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்ட செய்தி ஒன்று விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது. இதில், விஜய்யின் 60வது படத்தை இயக்குகிறேன் என்று கூறினார். பின்பு அவரை தொடர்பு கொண்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வந்தனர். பின்பு தான் தெரிந்தது அது ஒரு விஜய் ரசிகரின் பேக் ஐடி என்று. இதை தன் டுவிட்டர் பக்கத்தில் கே.வி.ஆனந்த் தெரிவித்து பின் அந்த டுவிட்டை டெலிட் செய்தார். சில நாட்களுக்கு முன் முருகதாஸ் பேக் ஐடி ஒன்று உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள், திரையுலகம்

போதை ரசிகரை போட்டு தாக்கிய நடிகை தன்ஷிகா!…

சென்னை:-நடிகை தன்ஷிகா தற்போது காத்தாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் கேரளாவில் உள்ள வகமோன் என்ற இடத்தில் நடந்து வருகிறது. பாடல் காட்சிகளை எடுத்து வருகிறார்கள். காட்சிகளுக்கான லைட்டிங் உள்ளிட்ட ஏற்பாடுகளை மற்றவர்கள் செய்து கொண்டிருக்கும்போது தன்ஷிகா கேரவனில் இருந்தார். அப்போது அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள நான்கைந்து இளைஞர்கள் குரூப்பாக வந்தார்கள். அவர்கள் அனைவரும் மது அருந்தி போதையில் இருந்திருக்கிறார்கள். இதனால் தன்ஷிகாவின் மானேஜர் அவர்களை படம் எடுக்கவிடாமல் தடுத்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ஒருவர் மானேஜரை தாக்கி இருக்கிறார். இதைக் கேள்விப்பட்டதும் கேரவனிலிருந்து வெளியே வந்த தன்ஷிகா அந்த இளைஞர்களை தாக்கி இருக்கிறார். அதில் பலர் தப்பிஓட ஒருவர் மட்டும் மாட்டினார். அவரை துவைத்து எடுத்துவிட்டாராம் தன்ஷிகா. பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்திருக்கிறார்கள். புகார் எதுவும் கொடுக்காததால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி விட்டார்கள்.

செய்திகள், திரையுலகம்

உலக அழகிப்போட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கவுரவம்!…

லண்டன்:-லண்டனில் 2014ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடந்தது. இதில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரொலென் ஸ்ட்ராஸ் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 121 அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட கோயல் முதல் பத்து இடங்களுக்குள் வந்தார். இந்த விழாவின் சிறப்பு நிகழ்வாக இதே போட்டியில் 1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஸ்வர்யாராய் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். 20 வருடங்களாக உலக அழகியாகவே வலம் வரும் ஐஸ்வர்யராய் சிறந்த நடிகை, சிறந்த சமூக சேவை, சிறந்த குடும்ப தலைவி என்கிற பல பரிமாணங்களில் முன்னணியல் நிற்பதால் அவரை கவுரப்படுத்த உலக அழகிப்போட்டி அமைப்பு முடிவு செய்து அவரை அழைத்தது. அவரை மேடைக்கு அழைத்தபோது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் குழந்தையுடன் மேடைக்கு வந்தார். அப்போது அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. உலக அழகி பட்டம் பெற்று 20 ஆண்டுகளுக்கு பிறகும் என்னை நினைவில் வைத்து அழைத்து கவுரவித்ததற்கு நன்றி என்றார் ஐஸ்வர்யா. 20 வருடங்களுக்கு முன்பு அந்த மேடையில் எப்படி நின்றாரோ அப்படியே இப்போதும் இருந்ததுதான் விழாவின் ஹைலைட். அதோடு இப்படி ஒரு சிறப்பு அழைப்பாளரை அழைத்து கவுரவிப்பதும் உலக அழகி போட்டியில் இதுவே முதன்முறை.

செய்திகள், திரையுலகம்

ஹிரித்திக் ரோஷனை பின்னுக்கு தள்ளிய நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட டீசர் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இது வரை இந்த டீசர் 25 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த டீசர் 42,000 லைக்ஸுகளை பெற்று தென்னிந்திய அளவில் முதலிடம் வந்தது. தற்போது 61,000 லைக்ஸை தொட்டு பாலிவுட் பிரபலங்களுக்கே சவால் விடுகிறது. சமீபத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த பேங் பேங் படத்தின் டீசர் லைக்ஸையும் என்னை அறிந்தால் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

நேதாஜி உயிருடன் உள்ளார்: நேரில் ஆஜர்படுத்த தயார்!… ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்…

மதுரை:-மதுரையை சேர்ந்த வக்கீல் ரமேஷ், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முக்கியமானவர். அவரது மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் நீடிக்கிறது. அவரது மரணம் குறித்த மர்மத்தை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால், மனு குறித்து மத்திய கேபினட் செயலாளர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜராகி, பாரதிய சுபாஷ் சேனா அமைப்பின் மாநில அமைப்பாளர் ஆ.அழகுமீனா சார்பில் முந்தைய மனுவிற்கு ஆதரவாக மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 1962ம் ஆண்டு நடந்த சீன போர் மற்றும் 64ம் ஆண்டில் நேரு இறுதி ஊர்வலம் ஆகியவற்றில் நேதாஜி இருந்துள்ளார். நேதாஜி இறந்துவிட்டதாக அறிவிக்க கூடாது என 4.8. 1997ல் அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர் இந்தியா திரும்பி வரும் போது போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. நேதாஜி ஒரு போர் குற்றவாளி எனவும், அவர் கண்டுபிடிக்கப்பட்டால் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்படுவார் எனவும் நேரு ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நேதாஜி ஒரு பிரம்மச்சாரி. அவருக்கு குழந்தைகள் கிடையாது. நேதாஜியின் வாரிசு என கூறப்படும் அனிதா போஸ் இந்திய தேசிய காங்கிரசால் உருவாக்கப்பட்டவர். எனவே அவர் டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாரா?… மேற்கு வங்கத்தில் உள்ள சவுல்மாரி ஆசிரமத்தில் நேதாஜி சாதுவாக இருக்கிறார் என்ற தகவலையடுத்து 1963, 1964ம் ஆண்டுகளில் மத்திய அரசின் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டுள்ளார். நேதாஜியை பலமுறை சந்தித்துள்ளதாக முத்துராமலிங்கத் தேவர் கூறியுள்ளார். தற்போதும் அவர் உயிருடன் உள்ளார். நேதாஜியை போர் குற்றவாளியாக அறிவித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளித்தால், பாரதிய சுபாஷ் சேனா அமைப்பின் தலைவர் அரவிந்த் பிரதாப் சிங் அனுமதியுடன் ஐகோர்ட்டில் நேதாஜியை ஆஜர்படுத்த தயாராக உள்ளோம். நீதிமன்றத்தில் அதற்குரிய ஆதாரங்களை தாக்கல் செய்யவும் தயாராக உள்ளோம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜன. 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

செய்திகள், விளையாட்டு

ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!…

புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்கள் வீரர்களை தக்க வைத்து கொள்வதற்கும், விடுவிப்பதற்கும் நேற்று கடைசி நாளாகும். விடுவிக்கப்படும் வீரர்கள் ஏலத்தின் மூலம் மீண்டும் விற்பனை செய்யபடுவார்கள். கடந்த ஆண்டில் அதிக தொகைக்கு (ரூ.14 கோடி) ஏலம் போன யுவராஜ்சிங்கை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விடுவித்துள்ளது. கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் இக்பால் அப்துல்லாவை பெங்களூரு அணி புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விக்கெட் கீப்பர் மன்விந்தர் பிஸ்லாவை வாங்கி இருக்கிறது. தனது விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலை விடுவித்து இருக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டில் ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்த தினேஷ் கார்த்திக், ரூ.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆகியோரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி கழற்றி விட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், மைக் ஹஸ்ஸி, பிரவீன்குமார் ஆகியோரை விடுவித்து இருக்கிறது. அதேநேரத்தில் பேட்ஸ்மேன் உன்முக்சந்த் (ராஜஸ்தான்), வேகப்பந்து வீச்சாளர் வினய்குமார் (கொல்கத்தா), விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் ஆகியோரை வாங்கி இருக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விஜய் உள்பட 13 வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து புஜாரா, பாலாஜி, முரளி கார்த்திக் ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். ஹர்பஜன்சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷேவாக்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் தக்க வைத்து கொண்டிருக்கிறது.

செய்திகள், திரையுலகம்

பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முன்னணி பாடலாசியராக திகழ்ந்து வருபவர் நா.முத்துக்குமார். இவர், கடந்த ஆண்டு ‘தங்க மீன்கள்’ படத்திற்காக எழுதிய ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார். தற்போது நா.முத்துக்குமாருக்கு மேலும் ஒரு கௌரம் கிடைத்திருக்கிறது. அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா சென்னை, தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர், முனைவர் செல்வின்குமார், நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். நா.முத்துக்குமார் பெறும் இரண்டாவது டாக்டர் பட்டம் இது. இதற்கு முன் 2006 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைகழகத்தில் தமிழ் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள், திரையுலகம்

நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!…

சென்னை:-நடிகர் சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம். இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் இருவரும் நடிக்கிறார்கள். படத்திற்கு வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஏ.வெங்கடேஷ் படம் பற்றி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறுகையில், வித்தியாசமான ஆக்ஷன் படம் இது. இந்தப் படத்தின் கதையம்சம் பரபரப்பான சம்பவங்களை முடிச்சிப் போட்டிருக்கும். சண்டமாருதம் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகாக சரத்குமார் 32 மணிநேரம் தூங்காமல் ஓய்வே எடுக்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்கு காரணமே மீராநந்தன் தான். சில மாதங்களுக்கு முன்பு மீராநந்தன் துபாயில் ஒரு ரேடியோ ஸ்டேஷனில் வர்ணனையாளராக சேர்ந்து விட்டார். அதனால் படப்பிடிப்புகாக அந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்கி க்ளைமேக்ஸை முடித்தோம். அவர் அனுமதி வாங்கித் தந்த நேரத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டுமானால் யாரும் தூங்க கூடாது. தூங்கவும் விடக்கூடாது என்று முடிவெடுத்து கஷ்டப் பட்டோம் க்ளைமேக்ஸ் முடிந்தது. அதற்கு பிறகு ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் உட்பட எல்லோரும் அவரை பாராட்டி மலர் கொத்து கொடுத்து அனுப்பி வைத்தோம் என்றார் ஏ.வெங்கடேஷ்.

செய்திகள், திரையுலகம்

ரூ.100 கோடியை தாண்டியது ‘லிங்கா’ பட வசூல்!…

சென்னை:-கடந்த 12ம் தேதி ரஜினி நடிப்பில் உருவான ‘லிங்கா’ படம் ரிலீசானது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் 700 தியேட்டர்களில் திரையிட்டனர். தெலுங்கு மொழியிலும் இப்படம் ரிலீசானது. அங்கும் நிறைய தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கேரளாவிலும் கணிசமான திரையரங்குகளில் ரிலீசானது. முதல் நாள் மட்டும் ரூ. 37 கோடி வசூல் குவித்து சாதனை படைத்தது. சிறப்பு காட்சிகள் மூலமும் வசூல் குவிந்தது. உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ‘லிங்கா’ படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ. 60 கோடி வசூலித்து உள்ளது. ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட இதர மாநிலங்களில் 3 நாட்களில் ரூ. 26 கோடி வசூலித்து உள்ளது. வெளிநாடுகளில் ரூ. 21 கோடி வசூலாகி உள்ளது. இது ரஜினியின் முந்தைய படமான ‘எந்திரன்’ படத்துக்கு இணையான வசூல் என்கின்றனர்.

Scroll to Top