December 16, 2014

செய்திகள், திரையுலகம்

‘லிங்கா’ திரைப்படத்தில் 26 நிமிட காட்சிகள் நீக்கம்!…

சென்னை:-ரஜினி நடித்த லிங்கா படத்தை ரஜினி ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடப்பட்டு வந்தாலும், ரஜினி ரசிகர் அல்லாத சாதாரண பொது மக்களுக்கு லிங்கா படம் 100 சதவிகிதம் திருப்தி தரவில்லை. ரஜினியின் நடிப்பில் படம் வெளி வந்து நீண்டகாலமாகிவிட்டதால், திருவிழாவுக்கு செல்லும் மனநிலையில் லிங்கா படத்தை பார்த்துவிட்டு செல்கின்றனர். இப்படி படம் பார்க்க வந்த மக்களினால்தான் 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்திருக்கிறது லிங்கா படம். அதே நேரம், லிங்கா படத்தைப் பற்றிய மவுத்டாக் என்கிற மக்களின் வாய்வழி விமர்சனம் பாசிட்டிவ்வாக இல்லை. படம் சுமார் என்றும், பட் நன்றாக இல்லை என்பதாகவும்தான் மக்களின் விமர்சனம் இருக்கிறது. இந்த வகை கருத்துக்கு மாறாக படம் சூப்பர் என்று சொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். சூப்பர் என்ற சொன்னவர்களும், சொதப்பல் என்று சொன்னவர்களும் ஒரு கருத்தில் மட்டும் மாறுபடாமல் ஒத்த கருத்தை வெளிப்படுத்தினர். அதாவது லிங்கா படம் நீளம் அதிகமாக இருக்கிறது என்பதே அந்த கருத்து. 174 நிமிடங்கள், அதாவது ஏறக்குறைய 3 மணி நேரப்படமாக இருந்தது லிங்கா. இது குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதை கவனித்த தியேட்டர்காரர்கள், இந்த தகவலை தயாரிப்பாளர் ராக்லைன் வெக்டேஷ் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் ரஜினியிடம் சொல்ல, உடனடியாய் கே.எஸ்.ரவிகுமாரை அழைத்தார் ரஜினி. என்னென்ன காட்சிகள் மொக்கையாய் இருக்கின்றன என்பதை பட்டியல் போட்டுள்ளனர். அதன்படி சில காட்சிகளை நீக்கம் செய்துள்ளனர். சுமார் 26 நிமிடக்காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டதால் தற்போது லிங்கா படம் இரண்டு மணிநேரம் 20 நிமிட படமாகிவிட்டது.

செய்திகள், முதன்மை செய்திகள், விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனே ஓய்வு பெறுகிறார்!…

கொழும்பு:-இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே கடந்த ஆகஸ்டு மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களம் இறங்க இருக்கும் நிலையில் டுவிட்டரில் மஹேலா ஜெயவர்த்தனே வெளியிட்டுள்ள கருத்தில் இது தான் உள்ளூரில் தான் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Scroll to Top