செய்திகள்,திரையுலகம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அஜித்தின் ‘வீரம்’ திரைப்படம் முதலிடம்!…

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அஜித்தின் ‘வீரம்’ திரைப்படம் முதலிடம்!…

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அஜித்தின் ‘வீரம்’ திரைப்படம் முதலிடம்!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவில் சாதாரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் 100 கோடி வசூல் சாதனை படைப்பது இப்போதெல்லாம் ஈஸியாகிவிட்டது. ஆனால் யாருடைய படங்கள் இதுவரை அதிக வசூல் பெற்றிருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் சரியாக தெரியாது. ஆனால் தற்போது ஆங்கில பத்திரிக்கை ஒன்று அதிக வசூல் செய்த படங்களை பற்றி கூறியுள்ளது.

அதில், நடிகர் அஜீத் நடித்த வீரம் படம் 130 கோடி வசூல் சாதனை படைத்து முன்னிலை வகிக்கிறதாம். அதோடு ஆரம்பம் படம் 125 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்த தகவலை ஏ.எம். ரத்னமே உறுதி செய்துள்ளாராம். அதோடு அஜீத்தின் மங்காத்தா 135 கோடி வசூல் செய்துள்ளதாக தயாநிதி அழகிரி கூறியுள்ளதாக அப்பத்திரிக்கை கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி