சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் என்றும் தன் ரசிகர்கள் மீது அதிக பாசம் கொண்டவர். ஆனால், இவர் என்ன தான் மாஸாக நடித்தாலும், நடனம் ஆடினாலும் ரிஸ்க் எடுத்து நடிப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
தற்போது இதையெல்லாம் முறியடிக்கும் பொருட்டு சிம்புதேவன் படத்தில் குள்ளராக விஜய் நடிக்கிறார். இக்கதாபாத்திரத்திற்காக மிகவும் சிரமப்பட்டு காலை மடித்து நடித்து வருகிறாராம். இப்படத்திற்கு பின்பு யார் கேட்டாலும் தளபதி ரசிகர்கள் காலரை தூக்கி விட்டு சொல்லலாம் விஜய் எடுத்த ரிஸ்க் பற்றி. இப்படத்தில் மேலும் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் அசத்த இருக்கிறார் விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி