சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்த வருட தொடக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாக உள்ள படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனரின் ‘ஐ’யுடன் மோத விடுவதா இல்லை என்னை அறிந்தால் தள்ளி போகுமா என்ற வர்த்தக ரீதியில் பலத்த குழப்பம் ஏற்பட்டது .
எது நடந்தாலும் சரி படம் பொங்கலுக்கு வரணும் என்று ஏ. ஏம் ரத்னம்மும் , அஜித்தும் விரும்புகின்றனர் . இந்நிலையில் என்னை அறிந்தால் டீம் கிட்ட இருந்து ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது அஜித்துக்கு இந்த வியாழக்கிழமை செண்டிமெண்ட்டில் அவ்ளோ ஈடுபாடு இல்லை என்றதால் படத்தை ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று வெளியிட முடிவு செய்து செய்துள்ளனர். தற்போது திரைஅரங்கை புக் செய்ய ஏ. ஏம் ரத்னம் ஆரம்பித்து விட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி