செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4479 கோடி: வருமான வரித்துறை நடவடிக்கை தொடங்கியது!…

இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4479 கோடி: வருமான வரித்துறை நடவடிக்கை தொடங்கியது!…

இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4479 கோடி: வருமான வரித்துறை நடவடிக்கை தொடங்கியது!… post thumbnail image
புதுடெல்லி:-வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே, 16 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தாக்கல் செய்திருந்தது. அதில் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக 628 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இவை அனைத்தும் ஜெனிவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் உள்ள கணக்குகள் ஆகும்.

இதுகுறித்து வருமான வரித்துறையினர் மார்ச் மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், எச்எஸ்பிசி வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் கணக்குகளில் 4479 கோடி ரூபாய் இருப்பதாகவும், 79 பேர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை தொடங்கியிருப்பதாகவும் மத்திய அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 628 பேரின் வங்கி கணக்குகளில் 289 கணக்குகளில் பணம் எதுவும் இல்லை. 201 பேரின் விலாசத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. 427 பேர் மீதான வழக்குகள் மட்டும் விசாரணையில் உள்ளன.

இந்த பணத்துக்கு சொந்தக்காரர்களின் கணக்குகள் தொடர்பான தொகையில் இருந்து 2926 கோடி ரூபாய் வரிவிதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 46 நபர்களுக்கு வருமான வரிச்சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது. இதுவரை, 3 நபர்களுக்கு உபரி வரி விதிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், கணக்கு வைத்துள்ளவர்களின் பெயர்கள் இந்த அறிக்கையில் வெளியிடப்படவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி