சென்னை:-நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் நடிக்கும் படம் நானும் ரவுடிதான். போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார், அனிருத் இசை அமைக்கிறார், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டது. படத்தில் நயன்தாராவின் இளமைக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடிக்க விஜய்சேதுபதி தாடியை எடுத்து விட்டார். உடல் எடையையும் குறைத்து விட்டார்.
கதைப்படி ஒரு பக்கத்து வீட்ட பையன் லுக் வேண்டும். 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் வேண்டும். அதற்காகத்தான் விஜய் சேதுபதியை தாடி எடுக்க வைத்தோம். சமீபத்தில் அவர் நடித்த சில படங்களுக்காக வெயிட் போட்டிருந்தார் அதையும் குறைக்கச் செய்தோம்.
இரண்டு மாதங்கள் நல்ல சாப்பாடு இல்லாமல் குறைத்தார். காஸ்ட்டியூம் டிசைனர் பல்லவி சிங் இன்றைய டிரண்டியான உடைகளை விஜய் சேதுபதிக்காக வடிவமைத்துள்ளார். எல்லாம் முடிந்து டெஸ்ட் ஷூட்டிங் நடத்தி ஓகே ஆனபிறகுதான் படப்பிடிப்புக்கு சென்றோம் என்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி