அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!… post thumbnail image
புதுக்கோட்டை:-இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இலங்கைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் சீறிப்பாய்ந்து வந்தன. இதனை பார்த்ததும் மீனவர்கள் தங்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களின் 6 படகுகளை சுற்றி வளைத்தனர்.
இதில் ராமேசுவரத்தை சேர்ந்த எடிசன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த படகுகளில் இருந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்ததோடு படகுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த பகுதியில் இனிமேலும் மீன் பிடிக்க வந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். அதன்பிறகு தமிழக மீனவர்கள் 27 பேரையும் இலங்கை கடற்படையினர் விடுவித்தனர். இதையடுத்து மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பினர். இதையடுத்து மீனவ குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே கடந்த 9–ந்தேதி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இருந்த போதிலும் அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பினார். அவர் இலங்கை சென்ற பின்னர்தான் தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இதில் உள்நோக்கம் இருப்பதாக தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 66 மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி