சென்னை:-இந்தியாவில் சமூக வலைத்தளங்கள் சினிமாவிற்கு தான் பெரிதும் பயன்படுகின்றன. அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் டுவிட்டர் அஜித் ரசிகர்கள் கண்ட்ரோலில் தான் இருக்கும் போல. என்னை அறிந்தால் டைட்டிலில் ஆரம்பித்து, டீசர் வரை டாக் கிரியேட் செய்து அமர்க்களம் செய்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று இப்படத்தில் இருந்து வெளியான ‘அதாரு அதாரு’ என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதற்காக #CelebratingYennaiArindhaalSingle, #AdhaaruAdhaaru என்று இரண்டு டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி