செய்திகள்,திரையுலகம் குடும்பப் படங்களில் மட்டுமே நடிக்க நடிகை ஹன்சிகா முடிவு!…

குடும்பப் படங்களில் மட்டுமே நடிக்க நடிகை ஹன்சிகா முடிவு!…

குடும்பப் படங்களில் மட்டுமே நடிக்க நடிகை ஹன்சிகா முடிவு!… post thumbnail image
சென்னை:-தமிழ்த் திரையுலகில் தற்போதைய முன்னணி நடிகை ஹன்சிகாதான். அந்த அளவிற்கு அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். இவர் நாயகியாக நடித்துள்ள மீகாமன், ஆம்பள ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த படங்களையடுத்து விஜய்யுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும், ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜுலியட் சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களிலும், புதுமுகம் ஒருவருடன் உயிரே உயிரே ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

எத்தனை படத்தில் நடித்தாலும் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படத்தில் மட்டுமே நடிப்பேன் என ஹன்சிகா முடிவெடுத்துள்ளாராம். ஓரளவிற்கு கிளாமராக மட்டுமே நடிப்பது என்றும் எந்த விதமான ஆபாசமான காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என ஹன்சிகா சொல்கிறாராம். குடும்பத்துடன் பார்க்கும் படங்களைத்தான் அனைவரும் விரும்பிப் பார்க்கிறார்கள். ஏன், நான் கூட படம் பார்க்கச் சென்றால் அப்படிப்பட்ட படங்களுக்குத்தான் செல்வேன் என்கிறாராம் ஹன்சிகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி