எபோலா நோய் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதுவரை 6,928 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்குள் இந்த நோய் தாக்கி 1000 பேர் பலியாகி உள்ளனர். தற்போது லைபீரியாவில்தான் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு நோய் தாக்கிய 7,244 பேரில் 4,181 பேர் இறந்துள்ளனர். சியாராலோனில் பாதிக்கப்பட்ட 6,802 பேரில் 1,463 பேரும், கினியாவில் 2,123 பேரில் 1,284 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தற்போது எபோலா நோய் தாக்கம் சியாராலோன் நாட்டில் அதிகம் உள்ளது. அதே நேரத்தில் லைபீரியாவில் குறைந்துள்ளது. கினியா, சியாராலோன் நாடுகளில் மட்டும் 16 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாலி நாட்டில் எபோலா தாக்கி 10 பேர் பாதித்து இருந்தனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா மற்றும் செனேகல் ஆகிய நாடுகளில் எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. தற்போது அங்கு எபோலா நோய் பாதிக்கப்பட்டவர்களும் இல்லை. உயிரிழப்பும் இல்லை. இந்த தகவல்கள் உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி