அதனால் அவரது கைவசம் 10 படங்களுக்கு மேல் உள்ளது. இதில் கயல் படத்தின் ஆடியோ சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. பிரபுசாலமன்-இமானின் கூட்டணி என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும் என்றொரு செண்டிமென்ட் உருவாகி விட்டதால், அந்த படத்தின் பாடல்கள் வந்ததும் கோலிவுட்டின் பிரபல ஹீரோக்களே அந்த பாடல்களை கேட்டு ரசித்தார்களாம். அதில் விஜய், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் அவரை தொடர்பு கொண்டு பாடல்கள் மனதை மயக்குவதாக உள்ளன என்று அவரை பாராட்டினார்களாம்.
அதில் சிவகார்த்திகேயன், எனது ரஜினி முருகன் படத்துக்கும் இதே மாதிரி சூப்பர் பாடல்களாக தர வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டாராம். இப்படி தனது பாடல்களை பிரபல நடிகர்களே மனம் திறந்து பாராட்டுவதால் மிகுந்த உற்சாகத்தில் இசையமைத்துக்கொண்டிருக்கிறார் இமான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி