செய்திகள்,முதன்மை செய்திகள் வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த டென்ஹாம் ஹார்மன் மரணம்!…

வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த டென்ஹாம் ஹார்மன் மரணம்!…

வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த டென்ஹாம் ஹார்மன் மரணம்!… post thumbnail image
ஒமாஹா:-வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த பிரபல மருத்துவ விஞ்ஞானி டென்ஹாம் ஹார்மன் தனது 98-வது வயதில் காலமானார்.அவரது தத்துவங்களை அடிப்படையாக வைத்தே புற்றுநோய், அல்சைமர் மற்றும் இதர நோய்கள் குறித்த பாடங்களும், ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன.

தனது 90-வது வயதுகளில் நெப்ராஸ்கா மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஹார்மன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்ததாக அம்மருத்துவ மைய செய்தி தொடர்பாளரான டாம் ஓ’கான்னர் தெரிவித்தார். ஹார்மனின் ஆய்வுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் மருத்துவ விஞ்ஞானிகளுக்கு, வயது முதிர்வு தொடர்பான ஆய்வுகளை நடத்த பேருதவியாக இருந்ததாக ஹார்வேர்டு மருத்துவ பள்ளி பேராசிரியரான டேவிட் சிங்க்ளேர் கூறினார்.

1954 ஆம் ஆண்டு வயது முதிர்வுக்கான அடிப்படை கூறுகளை ஹார்மன் கண்டுபிடித்தார். அவரது ஆய்வில் மூலம், ஆக்சிஜனை உட்கொள்ளும் போது வெளியாகும் துணை பொருட்கள் மனித உடலில் உள்ள செல்களில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதால், வயது முதிர்வு ஏற்பட்டு அதன் காரணமாக மரணம் அடைய நேரிடுகிறது என்ற அறிய தத்துவம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி