இந்த சம்பவம் உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தாக்குதல் நடந்த நவம்பர் 26ம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் நினைவு நாள் கடைக்கப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று மும்பை தாக்குதல் நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைத்து பார்க்கிறேன்.
அப்போது பலியான அப்பாவி மக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அந்த நாளில் ஏராளமான உயிர்களை தீவிரவாதிகளுடன் போராடி காப்பாற்றி வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் தியாகத்துக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள்தான் நமது உண்மையான கதாநாயகர்கள். இந்த நாளில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீவிரவாதத்தை வேரறுக்கவும் மனித நேயத்தை பரப்பவும் உறுதி ஏற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி