செய்திகள்,திரையுலகம் பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!…

பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!…

பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!… post thumbnail image
மும்பை:-பாய்ஸ், சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் நடிகை ஜெனிலியா. அவருக்கும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், ஜெனிலியா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவலை ரிதேஷ் தேஷ்முக், சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஜெனிலியாவும், ரிதேஷும் கடந்த 2003-ம் ஆண்டு ‘துஜே மேரி கசம்’ படம் மூலமாக இந்தியில் அறிமுகம் ஆனார்கள். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. மஸ்தி, தேரே நால் லவ் ஹோ கவா, லை பாரி ஆகிய படங்களிலும் அவர்கள் ஜோடியாக நடித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி