சென்னை:-பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் தந்தை அங்கய்யா இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. விவேக்கின் தந்தை உடல் அவர்களின் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது. அங்கய்யாவுக்கு விவேக் தவிர, மேலும் ஒரு மகள் உள்ளார்.
அங்கய்யாவின் மனைவி கோவில்பட்டியில் வசிக்கிறார். நாளை விவேக் தந்தையின் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. விவேக்கின் தந்தை மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி