மேலும் அந்த சிறுமிகளிடம் ஆபாச படத்தை காட்டி கட்டிப்பிடிக்கும் படியும், முத்தம் கொடுக்கும் படியும் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் கொடுத்த போதிலும் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்ற நோக்கத்தில் புகாரை கண்டு கொள்ளாமல் தட்டி கழித்து வந்தது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட 10 மாணவிகள் பெற்றோர்களுடன் ஐதராபாத் குழந்தைகள் நல உரிமை கமிஷனில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு குழந்தைகள் நல கமிஷன் உத்தரவு பிறப்பித்தது.இந்த தகவல் பரவியதும் நேற்று ஏராளமான பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாரை ஏற்காத பள்ளி நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த புகார் குறித்து குழந்தைகள் நல உரிமை கமிஷன் தலைவி அனுராதா ராவ் கூறும்போது, மாணவர்களின் கல்வியை மட்டுமே நிர்வாகம் கவனிக்கிறது. அவர்களது நடத்தை பற்றி கண்டுகொள்வது இல்லை. இதனை இப்படியே விட்டால் அந்த மாணவர்கள் எதிர்காலத்தில் படிப்பு இருந்தும் பொறுக்கிகளாகத்தான் இருப்பார்கள் என்றார். நல்ல மாணவர்களை உருவாக்க பள்ளி நிர்வாகம் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் அதனை பள்ளி நிர்வாகம் ஏற்கவில்லை என்று பெற்றோர்கள் புகார் கூறினார்கள். இந்த புகார் குறித்து சபல்கூடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி