செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் தலையில் காயம்!…

பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் தலையில் காயம்!…

பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் தலையில் காயம்!… post thumbnail image
சிட்னி:-ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நியூ சவுத்வேல்ஸ்– தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஆட்டம் இன்று நடந்தது. இந்த போட்டியின் போது முன்னணி வீரர்களில் ஒருவரான பிலிப் ஹியூக்ஸ் கடுமையாக காயம் அடைந்தார். பவுன்சர் பந்து அவரது தலையை பயங்கரமாக தாக்கியது.

இதில் அவர் சுயநினைவு இல்லாமல் கீழே விழுந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 63 ரன்னில் களத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்படுகிறது. கிளார்க் உடல் தகுதி பெறாவிட்டால் ஹியூக்ஸ் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பெற இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி