அந்த ஆண்டு வருகிற பிப்ரவரி 19ம் தேதி பிறக்கிறது. அந்த ஆண்டில் பிறப்பவர்கள் அதிர்ஷ்டம் அற்றவர்களாக கருதப்படுகின்றனர். எனவே தற்போது கர்ப்பிணி ஆக உள்ள பெண்கள் அடுத்த ஆண்டு குழந்தை பெற அச்சப்படுகின்றனர். தங்களுக்கு பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விடுவார்களோ என அஞ்சுகின்றனர். எனவே, அடுத்த ஆண்டில் தங்கள் குழந்தைகள் பிறப்பதை தடுக்க பல பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி வருகிற பிப்ரவரி 19ம் தேதிக்கு முன்பே சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு குழந்தை பிறப்பு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பலர் இப்போதே குழந்தை பிறப்பு சான்றிதழ்களை பெற தீவிர முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் சில மாகாணங்களில் பிறப்பு சான்றிதழ்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி