சென்னை:-அடுத்த மாதம் 12ம் தேதி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பிறந்த நாளையொட்டி ‘லிங்கா’ படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக டப்பிங் ரீ ரிக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன.
இதற்கிடையே, படத்தை தணிக்கை குழுவினர் பார்ப்பதற்காக இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. தணிக்கை குழு அதிகாரிகளும் உறுப்பினர்களும் படத்தை பார்க்கின்றனர். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர். ‘யு’ சான்று கிடைத்தால்தான் அரசின் கேளிக்கைவரி விலக்கை பெற முடியும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி