செய்திகள்,திரையுலகம் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (2014) திரை விமர்சனம்…

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (2014) திரை விமர்சனம்…

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் அஸ்வின், ரோபோ சங்கர் நடத்திவரும் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கடைக்கு எதிரே நாயகி அனுவின் வீடு. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அஸ்வினும் அனுவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள். இந்த காதல் விஷயம் தெரியாத அனுவின் பெற்றோர்கள் அனுவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதை கேட்கும் அனு, அஸ்வினுடன் சேராமல் பிரித்து விடுவார்கள் என்று பயந்து, அஸ்வினிடம் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் என்னை வீட்டில் இருந்து எங்கேயாவது கூட்டி செல் என்று கூறுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அஸ்வின், சில நாட்கள் போகட்டும் என்று கூறுகிறார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அனு, உடனே வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். ஒருநாள் அஸ்வின், தன் முதலாளி ரோபோ சங்கரின் வண்டியை பொய் சொல்லி எடுத்துச் சென்று அனுவை ஸ்கூலில் இருந்து அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு குகைக்குள் தங்க வைக்கிறார். நாம் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறினால் எல்லோருக்கும் சந்தேகம் ஏற்படும் என்றும், காலையில் நீ மட்டும் தனியாக இங்கே இருக்க வேண்டும். இரவில் நான் வேலையை முடித்து விட்டு உன்னுடன் இருக்கிறேன் என்றும் கூறி அங்கிருந்து செல்கிறான்.அனுவை காணாததால் பெற்றோர்கள் பதறுகின்றனர். அவளை தேட ஆரம்பிக்கிறார்கள். ஒரு பக்கம் போலீசும் மறுபக்கம் ரவுடிகளிடமும் சொல்லி அனுவை தேட வைக்கிறார் அனுவின் அப்பா. இரண்டு நாட்கள் இப்படி செல்ல, அனுவிற்கு குகைக்குள் இருக்க பயம் ஏற்படுகிறது. இதனால் இங்கிருந்து சீக்கிரம் வெளியே போகலாம் என்று அஸ்வினிடம் கூறுகிறார். இதற்கு அஸ்வின் இன்னும் இரண்டு நாட்கள் ஆகட்டும் என்று நாளை கடத்துகிறார்.

மறுநாள் அஸ்வின், அனுவை அங்கிருந்து வேறு இடத்திற்கு கூட்டிச் செல்லலாம் என்று நினைத்து அந்த குகைக்குள் செல்கிறார். அங்கு அனு காணாமல் திடுக்கிடுகிறார். இதனால் பயந்துபோய் அனுவை தேட ஆரம்பிக்கிறார்.அனு என்ன ஆனாள்? அஸ்வின் அனுவை தேடி கண்டுபிடித்து ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் நடிப்பு என்னும் பெயரில் ஏதோ செய்கிறார். இவருடைய காட்சிகள் மனதில் நிற்க வில்லை. சிறப்பாக நடனம் ஆட முயற்சி செய்திருக்கிறார். நாயகி அனு ஸ்கூல் பெண்ணுக்கு ஏற்ற முகம். ஆனால் நடிப்பில் தேறவில்லை. படத்தில் காமெடி என்னும் பெயரில் வரும் காட்சிகள் ரசிக்கும் படியாக அமையவில்லை. குறிப்பாக டீக்கடையில் நடக்கும் காமெடி காட்சிகள் சிரிப்பு பதிலாக கடுப்பை வரவழைக்கிறது. சிரிப்பு காட்சிகள் பார்ப்பவர்களை சீரியசாக ஆக்குகிறது. மாறாக சீரியஸான காட்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது.

இயக்குனர் விஜயன், ஒரு காதல் கதையை தேர்ந்தெடுத்து, ஒரு வீடு, ஒரு டீக்கடை, ஒரு குகை என்று படத்திற்கு திரைக்கதை அமைத்து முடித்திருக்கிறார். தேவையற்ற காட்சிகளை அதிகம் வைத்து படத்தின் நீளத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைப்பதாக நினைத்து திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாக சுவாரஸ்யமாக நல்ல கதாபாத்திரங்களை வைத்து அமைத்திருந்தால் ரசித்திருக்கலாம்.சைமன் ஆபிரகாமின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை ரசிக்கும் படி அமையவில்லை. விவேக்கின் ஒளிப்பதிவு பாடல்களில் மட்டும் காடு மலைகளை அழகாக பதிவு செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ காமெடி காதல்…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி