சென்னை:-டி.இமான் இசையமைப்பில் கயல் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படத்தின் பாடல்களைக் கேட்ட விஜய், அவற்றை மெய்மறந்து கேட்டு ரசித்தாராம். ரசித்தது மட்டுமல்ல, உடனடியாக இசையமைப்பாளர் இமானுக்கு போன் செய்து, தன் பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார். கயல் படத்தின் என் ஆள பாக்கப்போறேன்…, எங்கிருந்து வந்தாயோ… ஆகிய இரண்டு பாடல்கள்தான் இப்போது விஜய்யின் ஃபேவரைட் நம்பராம்.
அவருடைய ஐ பாடில் இந்தப் பாடல்கள்தான் ரிப்பீட் மோடில் இருக்கிறதாம். இசையமைப்பாளர் இமான் அறிமுகமானது விஜய்யின் தமிழன் படத்தின் மூலமாகத்தான். தமிழன் படத்துக்குப் பிறகு இந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த விஜய்யின் ஜில்லா படத்திற்கும் இமான்தான் இசையமைப்பாளர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி