கத்தி படமும் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, அப்போதே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழில் கிடைத்த வரவேற்பையடுத்து, தெலுங்கில் இந்தப்படத்தை, ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்தார்கள். முதலில், பவன்கல்யாண் படத்தில் நடிக்க விருப்பம் காட்டி, படத்தையும் பார்த்தார். தனக்கு இந்த கதையும், கதாபாத்திரமும் பொருத்தமாக இருக்காது என சொல்லி அவர் விலகிவிட்டார் என்றார்கள். அதையடுத்து, இந்த வாரம் படம் வெளியாகும் என்று சொன்னார்கள். இருந்தாலும், அதுவும் உறுதியான தகவல் இல்லை என்கிறார்கள்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி அதிரடி ஹீரோக்களில் ஒருவரான ஜுனியர் என்.டி.ஆர். கத்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளதாம். ஒருவேளை அவர் நடிக்க சம்மதித்தால் கத்தி படத்தின் தெலுங்கு டப்பிங் வெளியாகாது என்றும் சொல்கிறார்கள். இன்னும் ஒருசில நாட்களில் இதுபற்றி உறுதியான முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி