இந்நிலையில், சமீபகாலமாக சென்னையில் முகாமிட்டிருக்கும் சந்தியா, பொழுது போகாததால் தனது நண்பர்களுடன் காரில் ஜாலி டூர் அடிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்படி செல்லும்போது சில சமயங்களில் சரக்கு அடித்து விட்டும் கார் ஓட்டிச்செல்கிறாராம். அப்படி கடந்த வாரத்தில் ஒருநாள் அவர் சென்னை புறநகர் பகுதியில் கார் ஓட்டிச்சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் போலீசார் வழிமறித்தபோது , இவர் சரக்கு அடித்திருப்பது தெரிய வர, ஸ்பாட் பைன் போட்டு விட்டார்களாம்.
அதனால் சில ஆயிரங்களை அந்த இடத்திலேயே கட்டிய, சந்தியா மீண்டும் காரை எடுத்தபோது, அவர் கார் ஓட்டுவதற்கு தடை விதித்த போலீசார், சந்தியாவுடன் சென்ற இன்னொரு நபரை வைத்து கார் ஓட்டுமாறு சொல்லி அனுப்பி வைத்தார்களாம். இந்த சம்பவத்துக்குப்பிறகு தற்போது தான் கார் ஓட்டுவதையே நிறுத்தி விட்டாராம் சந்தியா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி