பஞ்சிம்:-கோவாவில் நடைபெறும் 45-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அரசியலில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார்.
பல்வேறு கட்சிகள் ரஜினியை தங்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தபோதும், அந்த அழைப்புகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள ரஜினி, இதன் மூலம் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். முன்னதாக லிங்கா பட விழாவில் பேசிய ரஜினி, அரசியல் மிகவும் ஆபத்தானது, அதே சமயம் ஆழமானதும் கூட என்றதுடன், அரசியலில் இறங்குவது குறித்து பயப்படவில்லை என்றும் தயங்குவதாகவும் குறிப்பிட்டார்.இவ்விழாவில், இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரபலம் என்ற விருதினை மத்திய அரசு ரஜினிக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி