செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ பட கதையை திருடவில்லை: கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு!…

‘லிங்கா’ பட கதையை திருடவில்லை: கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு!…

‘லிங்கா’ பட கதையை திருடவில்லை: கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு!… post thumbnail image
சென்னை:-முல்லைவனம் 999 என்ற தனது கதையைத் திருடி ‘லிங்கா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளதால், அதை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் கே.ஆர்.ரவிரத்தினம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு ‘லிங்கா’ திரைப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்தார்.அதன் விவரம்:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைச் சார்ந்து கதை எழுதியதால் மட்டும் மனுதாரர் ‘லிங்கா’ கதை தன்னுடையது எனக் கூற முடியாது. ‘லிங்கா’ படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. அதை மட்டும் வைத்து படத்தின் கதை இதுதான் என்ற முடிவு செய்ய முடியாது.
மனுதாரரின் கதையும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அவரது கதையைத் திருடியதாக கூறுவதை மறுக்கிறேன். ‘லிங்கா’ மூலக்கதை எழுதிய பொன்குமரன் கிங்காங் என்ற பெயரில் 2010 டிசம்பர் 12-இல் பதிவு செய்துள்ளார். பென்னிகுக் வாழ்க்கை வரலாற்றுக்கு தனிநபர் யாரும் உரிமை கோர முடியாது. காவல் துறை நடவடிக்கை கோரும் அளவுக்கு குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கதாசிரியர் பொன்குமரன் தாக்கல் செய்துள்ள மனுவில், முல்லைப் பெரியாறு அணையைக் கருவாக வைத்து கதை எழுதியதால் மட்டும் மனுதாரர் கதைக்கு காப்புரிமை கோர முடியாது. யூ டியூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த கதையைத் திருடியதாகக் கூறுவது விஷமத்தனமானது.நான் எழுதிய கதை கூட திரைப்படத்திற்குத் தகுந்த வகையில் மாற்றப்படலாம். மனுதாரர் தனது கதையை வெளியிடவே இல்லை. எனவே ‘லிங்கா’ கதைக்கு அவர் உரிமை கோர முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி