செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் 10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்!…

10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்!…

10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்!… post thumbnail image
லண்டன்:-ஒருவருக்கொருவர் முத்தமிடும் போது நோய் பரவும் ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது அனைவரும் அறிந்தது தான். ஆனால், 10 வினாடி முத்தமிட்டால் 8 கோடி பாக்டீரியாக்கள் இருவரது உடலுக்குள் பரவும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் 21 ஜோடிகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

10 வினாடிகள் மட்டும் ஒருவரையொருவர் முத்தமிடச் செய்து அவர்களின் உமிழ்நீரை எடுத்து பரிசோதனை செய்தனர்.அந்த உமிழ்நீரில் 8 கோடி பாக்டீரியாக்கள் இருந்தது. அதே வேளையில் நாள் ஒன்று 9 தடவை இவர்கள் முத்தமிடும் போது பல நூறு கோடி பாக்டீரியாக்கள் மற்றும் நோய்கிரிமிகள் இருவரது உடலுக்குள் சென்று ஊடுருவுவது கண்டுபிடிக்கப்பட்டது. பாக்டீரியாக்கள் மனிதர்களின் வாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை உணவு பொருட்களை செரிக்க செய்து சத்துக்களை பிரித்து செல்களுக்கு அனுப்புகின்றன. அதன் மூலம் நோயில் இருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது.

அதே நேரத்தில் உடலில் 10 லட்சம் கோடி நுண்ணுயிர்களும் உள்ளன. அவை மைக்ரோ பயோம் என்றழைக்கப்படுகிறது. வாயில் 700 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. இவை அனைத்தும் உமிழ் நீரில் கலந்துள்ளன.எனவே, ஜோடிகள் முத்தமிடுவதன் மூலம் அவர்கள் தங்களுக்கு இடையே பல கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் மற்றும் நோய் கிரிமிகளை தங்கள் உடலுக்குள் பகிந்து கொள்வதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி