சென்னை:-நடிகர் சந்தானம் ஹீரோ வேஷம் கட்டத்தொடங்கியவுடன் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது. இதை ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொண்ட இவர், மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். சுந்தர்.சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது, ஏற்கனவே சந்தானம் இவரது இயக்கத்தில் கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் சுந்தர்.சி, விஷாலுடன் இணைந்திருக்கும் ஆம்பள படத்தில் சந்தானம் கைக்கோர்த்துள்ளார். இப்படத்தில் இவர் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி