அதிலும், ரஜினிக்கு இணையாக ஸ்டைல் காட்டி நடிக்கிறார். கமலை விட முகபாவணையில் நடிப்பை அற்புதமாக பிரதிபலிக்கிறார் என்று ஓவர்டோஸ் கொடுத்தார். ஆனால் அதைக்கேட்டு இதற்கு மேலும் நான் இந்த மேடையில் உட்கார்ந்திருக்கவா என்பது போல் தனது இருக்கையில இருந்து எழுந்து ஓடினார் தனுஷ். அதோடு, ஏன் சார் அவங்களையெல்லாம் என்னோட ஒப்பிட்டு மாட்டி விடுறீங்க என்பது போல் கையால் சைகை காட்டினார். அதையடுத்து, தனது இருக்கையில் வந்து அமர்ந்தார் தனுஷ்.
அப்போது கார்த்திக் குறுக்கிட்டு, தனுஷோட கால்சீட் வேணுமுன்னா நேருல கேட்க வேண்டியதானே. அதுக்கு எதுக்கு இப்படியெல்லாம் ரஜினி, கமலுடன் ஒப்பிட்டு, என்ன உதய் நீங்க … என்று தனது பாணியில் அவரை கிண்டல் செய்தார். அதன்பிறகு ஓவர் புகழ்ச்சியை ஓரளவு குறைத்தார் ஆர்.வி.உதயகுமார். இருப்பினும் இன்னும் எப்படியெல்லாம் புகழ்ந்து தள்ளி நம்மை தர்மசங்கடத்தில் மாட்டிவிடப்போகிறாரோ என்ற பதபதப்பிலேயே அமர்ந்திருந்தார் தனுஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி