செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100வது வெற்றி!…

இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100வது வெற்றி!…

இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100வது வெற்றி!… post thumbnail image
*எல்லா வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 100-வது வெற்றி (ஒரு நாள் போட்டி-83, டெஸ்ட்-14, 20 ஓவர் போட்டி-3) இதுவாகும்.

*1982-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று ‘ஒயிட்வாஷ்’ செய்திருந்த இந்திய அணி 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த அணியை ‘ஒயிட்வாஷ்’ ஆக்கி நையபுடைத்துள்ளது.

*இந்தியா ஒரு அணியை 5-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்வது இது 5-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு இங்கிலாந்தை 2 முறையும், நியூசிலாந்து, ஜிம்பாப்வேயை தலா ஒரு முறையும் இவ்வாறு மண்ணை கவ்வ வைத்திருக்கிறது.

*இந்த தொடரில் அதிக ரன் குவிப்பில் முதல் 5 இடங்களில் முறையே இலங்கை கேப்டன் மேத்யூஸ் (339 ரன்), இந்திய வீரர்கள் விராட் கோலி (329 ரன்), ஷிகர் தவான் (283 ரன், 3 ஆட்டம்), ரோகித் சர்மா (273 ரன், 2 ஆட்டம்), அம்பத்தி ராயுடு (250 ரன்) ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் இந்தியாவின் அக்ஷர் பட்டேல் 11 விக்கெட்டுகளுடன் (5 ஆட்டம்) முதலிடத்திலும், உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளுடன் (4 ஆட்டம்) 2-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி