இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார். மாநாட்டின் இடைவேளையின் போது புதினை அமெரிக்க அதிபர் ஒபாமா, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, புதினிடம் உக்ரைன் விவகாரத்தில் ரஷியா தலையீட்டுக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கண்டனம் தெரிவித்தார். உக்ரைன் ஸ்திரதன்மையுடன் சுதந்திரமாக செயல்பட ரஷியா உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை இல்லாவிடில் ரஷியா மேலும் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என மறைமுகமாக எச்சரித்தார்.
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கூறும் போது, உக்ரைனில் இருந்து ரஷியா ராணுவம் உடனே வெளியேற வேண்டும். அது ஒன்றையே தங்களிடம் தெரிவிக்கிறேன் என்றார். அதே கருத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கூறியதாக தெரிகிறது.கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடை விதித்துள்ளது. இது போன்ற சூழ்நிலைகளால் ரஷிய அதிபர் புதின் கடும் எரிச்சல் அடைந்தார். எனவே, இன்று நடைபெறும் 2–வது நாள் மாநாட்டின் நிறைவு விழாவுக்கு இடையில் அவர் வெளியேறினார்.பின்னர் மாநாட்டு அரங்கத்தில் இருந்து வெளியேறிய புதின், வாசலில் காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் தனது செயலுக்கான நியாயத்தை பதிவு செய்தார்.
நானும் என்னுடன் வந்த ரஷ்ய அதிகாரிகளும் இங்கிருந்து (பிரிஸ்பேன் நகரிலிருந்து) விளாடிவோல்ஸ்டாக்குக்கு விமானத்தில் செல்ல 9 மணி நேரமாகும். அடுத்து, அங்கிருந்து மாஸ்கோ நகரைச் சென்றடைய மேலும் 9 மணி நேரமாகும். மொத்தம் 18 மணி நேரம் விமானத்தில் பயணித்து, எனது வீட்டுக்கு செல்ல வேண்டும்.பின்னர், வழக்கம் போல் மறுநாள் என் பணிகளை தொடர வேண்டும். எனவே, இந்த பயணத்துக்கு முன்னர் குறைந்தது நான்கைந்து மணி நேரமாவது தூங்க வேண்டியுள்ளது. எனவே தான் மாநாடு முடியும் முன்பே புறப்படுகிறேன் என்றார்.பின்னர், அவரது தனி விமானம் பிரிஸ்பேன் நகரில் இருந்து விளாடிவோல்ஸ்டாக் நோக்கி புறப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி