செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யை கவர்ந்த டாக்கி டாக்கி பாடல்!…

நடிகர் விஜய்யை கவர்ந்த டாக்கி டாக்கி பாடல்!…

நடிகர் விஜய்யை கவர்ந்த டாக்கி டாக்கி பாடல்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிபிராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம் ‘நாய்கள் ஜாக்கிதை’. இதில் அவருக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடித்திக்கிறார். போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் நடிக்க, அவருக்கு இணையான கேரக்டரில், பயிற்சி பெற்ற பெல்ஜியம் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றும் நடித்திருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் டாக்கி டாக்கி எனும் வீடியோ பாடலை வெளியிட்டனர்.இதை பார்த்த நடிகர் விஜய், பாடல் சிறப்பாக இருந்தது என்றும் நான் விரும்பி பார்த்தேன் என்றும் சிபிராஜிடம் கூறியுள்ளார். விஜய் இவ்வாறு கூறியது தனக்கு பெருமையாக உள்ளது என்று சிபிராஜ் தெரிவித்துள்ளார். முன்பு இதே படத்தின் டிரைலர் வெளியான போதும் டிரைலரை பார்த்து விட்டு முதல் ஆளாக விஜய் பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி