சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் லட்சிய படமான மருதநாயகம் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது. இது குறித்து கமல்ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:–மருதநாயகம் படத்தை எடுக்க பணம் மட்டும் தேவையானதாக இல்லை வலுவான விநியோகமும் வேண்டும்.
ஆங்கிலம், பிரெஞ்ச், தமிழ், மொழிகளில் இப்படம் எடுக்கப்படுவதால் அனைத்து பகுதிகளிலும் சரியான முறையில் ரிலீஸ் செய்ய வேண்டியது முக்கியம். எனவே அதற்கான சூழ்நிலைகள் அமைந்தால் படத்தை எடுக்க தயார். ஏற்கனவே இந்த படத்துக்கான 30 நிமிட காட்சிகள் முடிக்கப்பட்டு விட்டன. மீதி 2 மணி நேர காட்சிகள் எடுக்கப்பட வேண்டும். எப்போது வேண்டுமானாலும் எடுப்பேன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி