இந்த ஜி-20 மாநாட்டை நடத்தும் நாடு என்ற வகையில், மாநாட்டு அரங்கத்துக்குள் நுழைந்த ஒவ்வொரு நாட்டின் தலைவரும் தங்களை வரவேற்ற ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட்டுடன் கை குலுக்கிவிட்டு, அவருடன் நின்று புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்துவிட்டு, தங்களது இருக்கைக்கு அமரச் சென்றனர். அவ்வரிசையில், மாநாட்டு அரங்கத்துக்குள் நுழைந்த இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியும் டோனி அபாட்டுடன் கை குலுக்க வலது கரத்தை நீட்டினார்.
மோடியின் கரத்தைப்பற்றிய டோனி அபாட், அவரை அருகே அழைத்து, மார்போடு சேர்த்து ஆரத்தழுவி வரவேற்றார். வேறு எந்த நாட்டின் தலைவர்களும் அளிக்காத உள்ளப்பூர்வமான வரவேற்பு மோடிக்கு அளிக்கப்பட்டதைக் கண்ட புகைப்படக் கலைஞர்கள், இந்த அபூர்வக் காட்சியை தங்களது கேமராக்களுக்குள் சிறைப்படுத்திக் கொண்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி