செய்திகள்,திரையுலகம் மகள் பள்ளியில் கேமராவுடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜீத்!…

மகள் பள்ளியில் கேமராவுடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜீத்!…

மகள் பள்ளியில் கேமராவுடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜீத்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. படவிழாக்களிலும் கலந்து கொள்வது இல்லை. தற்போது கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் அஜீத் தனது மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளிக்கு திடீர் என சென்றார். கழுத்தில் கேமரா அணிந்து இருந்தார். ஓரமாக நின்று அந்த பள்ளியில் நடந்த விழாவை கண்டு ரசித்தார்.
அஜீத்தை பார்த்ததும் பள்ளி குழந்தைகள் குதுகலம் ஆனார்கள். மகளுடன் மற்ற குழந்தைகளை நிற்க வைத்து அஜீத் தனது கைப்பட போட்டோ எடுத்தார். நீண்ட நேரம் பள்ளியில் இருந்து விட்டு புறப்பட்டு சென்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி