புதுடெல்லி:-கிராமங்களை வளர்ச்சியடையச் செய்வதற்காக மாதிரி கிராம திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு எம்.பி.யும். 2016ம் ஆண்டுக்குள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து முன்மாதிரி கிராமமாக மேம்படுத்த வேண்டும். 2019-ம் ஆண்டுக்குள் மேலும் 2 கிராமங்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மேம்படுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள குக்கிராமத்தை தத்தெடுத்தார். உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் லக்னோவில் உள்ள பெட்டி என்ற கிராமத்தை தத்தெடுத்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தனது தொகுதியான ரேபரேலியில் உள்ள உத்வா என்ற குக்கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி