செய்திகள்,திரையுலகம் ஒரே கெட்டப்பில் நடிகர் அஜித், விவேக்!…

ஒரே கெட்டப்பில் நடிகர் அஜித், விவேக்!…

ஒரே கெட்டப்பில் நடிகர் அஜித், விவேக்!… post thumbnail image
சென்னை:-தற்போது கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடித்து வரும் விவேக், அஜித்துடன் பணிபுரியும் அனுபவங்கள் குறித்து ரசிகர்களுடன் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் என்னை அறிந்தால் படத்தில் தானும் அஜித்தும் ஒரே கெட்டப்பில் தோன்றவுள்ளதாக கூறியுள்ளார் விவேக்.

தன்னை இப்படி மாற்றியதில் அஜித்திற்குத் தான் முக்கியப் பங்கு எனவும் கூறியிருக்கிறார். அதவாது, படத்தில் முதல் முறையாக ‘சால்ட் அன்ட் பெப்பர் லுக்’கில் தோன்றியிருக்கிறார் விவேக்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், இது அஜித்தின் யோசனை. நாங்கள் இருவரும் ஒரே கெட்டப்பில் தோன்றுகிறோம். இதற்கு மேல் இதைப் பற்றி எதுவும் சொல்ல இயலாது என தெரிவித்துள்ளார். மேலும் அந்தக் கெட்டப்பில் தனது புகைப்படத்தையும் அதில் பகிர்ந்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி