சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் – முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்று ‘டிரா’ ஆனது. 2-வது சுற்றில் கார்ல்சனும், 3-வது சுற்றில் ஆனந்தும் வெற்றி பெற்றனர். 4-வது சுற்று டிராவில் முடிந்தது.
இந்நிலையில், நேற்று 5-வது சுற்று நடைபெற்றது. இந்த சுற்றிலும் யாருக்கும் வெற்றி கிடைக்காமல் டிராவிலேயே ஆட்டம் முடிந்தது. 5 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி