சென்னை:-நடிகர் தனுஷ் அனேகன், ஷமிதாப் படத்திற்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, அனிருத் இசையமைக்கயிருக்கிறார்.
இதற்கு முன்பு தனுஷின் பெயரை வைத்தே வந்த படங்களான பரட்டை (எ) அழகுசுந்தரம், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், குட்டி, மரியான் போன்ற படங்கள் தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் மாரி படத்தின் தலைப்பும் தனுஷின் கேரக்டர் பெயராகவே இருக்க, ஒருவேளை படம் தோல்வியை சந்திக்குமா… என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி