சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. லைபிரீயா நாட்டில் தான் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. அங்கு மட்டும் 2830 பேர் உயிரிழந்துள்ளனர். கினியா நாட்டில் 1100 பேர் உயிரிழந்துள்ளனர். மாலி நாட்டில் நோய் தாக்குதல் இப்போது தான் தொடங்கி உள்ளது. அங்கு நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்த நாடுகளில் 14 ஆயிரம் பேர் எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களை பாதுகாப்பாக புதைப்பதற்கு மட்டும் 370 பயிற்சி பெற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி