இந்நிலையில் 4-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. முந்தைய நாளில் தோல்வி அடைந்திருந்தாலும் அதன் தாக்கம் எதுவுமில்லாதபடி நம்பர் ஒன் வீரரான கார்ல்சன் வெள்ளை நிறக்காயுடன் ஆட ஆரம்பித்தார். முதலில் தனது ராஜாவுக்கு முன் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார். ஆனந்த் தனது பிஷப்புக்கு முன் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் ஏற்றி ‘சிசிலியன்’ முறையில் துவக்கினார்.
முதல் 17 நகர்த்தல்களில் தலா இரண்டு சிப்பாய் பரிமாற்றம் மட்டுமே நிகழ்ந்தது. 18-வது நகர்த்தலில் குதிரைகள் வெட்டப்பட்டன. 22-வது நகர்த்தலில் தலா ஒரு யானை வெளியேற்றப்பட்டன. 25, 26-வது நகர்த்தல்களில் பிஷப்புகள் வீழ்த்தப்பட்டன.என்றாலும் ஆட்டம் விறுவிறுப்பு இன்றி மந்தமான நிலையில் சென்று கொண்டிருந்தது. 30-வது நகர்த்தலின் போது இருவரும் சமநிலையில் இருந்தனர். கால அவகாசமும் சமமாக இருந்தது. இருப்பினும் பரஸ்பர ‘டிரா’ செய்யும் மனம் இல்லாமல் ஆடிக் கொண்டிருந்தனர்.
ஆனந்தின் ‘டி’ வரிசை சிப்பாய் கார்ல்சனுக்கு சற்று குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தது. எது எப்படி இருந்தாலும் மீண்டும் மீண்டும் ‘செக்’ என்கிற முறையில் ஆட்டத்தினை டிரா செய்ய முடியும் என்ற எண்ணத்தில் கார்ல்சன் சிப்பாயை முன்னேற்ற முயற்சித்தார்.கார்ல்சனின் ‘ஏ’ வரிசை சிப்பாயை ஆனந்த் கைப்பற்றியதுடன், இருந்த கொஞ்ச நம்பிக்கையும் தளர்ந்து ‘டிரா’ செய்ய கார்ல்சன் ஒப்புக் கொண்டார். சுமார் 5 மணி நேரம் நீடித்த ஆட்டம் 47-வது நகர்த்தலில் முடிவுக்கு வந்தது.ஆனந்த் ‘சிசிலியன்’ பாணியில் கார்ல்சனுக்கு எதிராக 16 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும், 10-ல் டிராவும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியில் இருவரும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கிறார்கள். இன்று ஓய்வு நாளாகும். நாளை வெள்ளை நிற காயுடன் ஆனந்த் களம் காண்பார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி