உணர்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த ஸ்கிரிப்ட். சார்லி சாப்ளின், நகேஷ் ஆகியோர் உணர்ச்சியால் நெகிழவும் வைப்பார்கள், சிரிக்கவும் வைப்பார்கள். அப்படி ஒரு படம் இது. அதனால் இந்தப் ஸ்கிரிப்டுக்கு முதலில் பிட்டர் சாக்லெட் என்றுதான் தலைப்பு வைக்க முடிவு பண்ணினோம். உடனே கமல் தமிழ்ல தலைப்பு வைக்கல. தமிழை சாகடிச்சிட்டார்னு சொல்வாங்க. அதனால் தமிழில் உத்தம வில்லன் என்று வைத்தோம்.
வில்லன் என்பதுகூட ஆங்கிலச் சொல்தான். அதற்கும் ஏதாவது பிரச்சினை வருமுன்னு யோசிச்சோம். அதற்கு பிறகுதான் மல்யுத்தம் செய்பவன் மல்லன் என்பது மாதிரி வில் வித்தை செய்பவன் வில்லன் என்ற சொல் இருப்பதால் அதையே வைத்து விட்டோம். உத்தம வில்லன் என்றால் அது சிவனையும், அர்ஜுனனையும் குறிக்கும். கதையிலும் அப்படி ஒரு உட் கருத்து இருக்கு என்கிறார் கமல்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி