சோச்சி:-உலக சாம்பியன் கார்ல்சென், இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் மோதும் உலக செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது.12 சுற்றுகள் கொண்ட இந்தப்போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. இரண்டாவது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் 3-வது சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இறுதியில் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்த போட்டியின் முடிவில் ஆனந்த், கார்ல்சென் ஆகிய இருவரும் 1.5 என்ற புள்ளியுடன் சமநிலையில் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி