சென்னை:-‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ என இரண்டு படங்களை முடித்து விட்டார் கமல். இந்நிலையில் விஸ்வரூபம் 2 எப்போது வெளியாகும் என கமல் அவர்கள் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விஸ்வரூபம், முதல் பாகத்திற்கு நேர்ந்த பிரச்சினையைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்து நான் கவலையடைந்தேன்.
அதனால் அப்படத்தை வெளியிட காத்திருக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்போது அப்படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டேன். ‘விஸ்வரூபம் 2’-ன் படப்பிடிப்பு, ஒரு பாடலைத் தவிர, போன வருடம் அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. தயாரிப்புப் பணிகள் தாமதமாவதால் இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி