சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆனால், சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இப்படம் கத்தி படத்தின் காப்பி என்று கூறிவருகின்றனர். கத்தி படத்தில் வருவது போல் ஒரு ரஜினி செய்யும் உதவியை பலர் தடுக்க, வேறு ஒரு ரஜினி அவர்களை எதிர்த்து மக்களுக்கு நல்லது செய்வாராம்.
இந்த கதை வைரலாக பரவ, படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ், கத்திக்கும் லிங்காவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி இதற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி