சென்னை:-சைதாப்பேட்டையில் டீக்கடையில் வேலை பார்ப்பவர் சாகுல்ஹமீது. இவரது மகள் பாத்திமா. சைதாப்பேட்டை அரசு பள்ளியில் படித்து பிளஸ்–2 தேர்வில் 1109 மதிப்பெண் பெற்றார். பாத்திமாவுக்கு என்ஜினீயரிங் படிக்க ஆசை. ஆனால் வறுமை காரணமாக அவரால் படிக்க முடியவில்லை.
இதுபற்றி அறிந்த நடிகர் விஜய், என்ஜினீயரிங் கல்லூரியில் பாத்திமா படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டார். கே.கே.நகரில் உள்ள மீனாட்சி என்ஜினீயரிங் கல்லூரியில் இதற்கான தொகையை கட்டினார்.
இதுகுறித்து பாத்திமா கூறும்போது, வறுமையால் என்ஜினீயரிங் படிக்க முடியாமல் போய்விடுமோ என்று தவித்தபோது கடவுள் போல் விஜய் அண்ணன் வந்து எனக்கு உதவினார். வாழ்நாள் முழுக்க இதை மறக்க மாட்டேன். நன்றாக படி, எதை பற்றியும் கவலைப்படாதே என்று தைரிய மூட்டிய விஜய் அண்ணாவுக்கு நன்றி என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி