இது 12 சுற்றுகளை கொண்டது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு தலா அரைபுள்ளியும் வழங்கப்படும். முதலில் 6.5 புள்ளியை எட்டும் வீரருக்கு மகுடம் சூடப்படும். போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7.6 கோடியாகும். இதில் சாம்பியன் ஆகும் வீரர் 60 சதவீத தொகையை பரிசாக பெறுவார். முதல் சுற்று இன்று நடக்கிறது.இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதே ‘இளம் புயல்’ கார்ல்சனிடம் தான் ஆனந்த் தோல்வியடைந்தார். அப்போது ஆனந்த் நடப்பு சாம்பியன்.
கார்ல்சன் தகுதி சுற்று மூலம் வந்த போட்டியாளர். ஆனால் இப்போது நிலைமை வேறு. கார்ல்சன் நடப்பு சாம்பியன். ஆனந்த் தகுதி சுற்று மூலம் வெற்றி பெற்று மறுபடியும் கோதாவுக்கு வந்திருக்கிறார். கார்ல்சனை பழிதீர்க்க ஆனந்துக்கு இதுவே அருமையான வாய்ப்பாகும். தமிழகத்தை சேர்ந்த 44 வயதான ஆனந்த் 6-வதுமுறையாக உலக பட்டத்தை வெல்வாரா?… என்பதே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி