இந்நிலையில் முதல் படத்திலேயே பெரிய அளவில் வெற்றியை அள்ளிய தீபிகா, ஷாருக்கான் ஜோடி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தது. இந்த படம் அனைத்து பாலிவுட் படங்களின் சாதனையையும் முறியடித்து பாக்ஸ் ஆபிசில் 200 கோடியை வசூலித்ததுடன் மெகா பிளாக்பஸ்டர் படமாக இருந்தது. இந்த மெகா ஹிட் ஜோடி ஹேப்பி நியூ இயர் படத்தில் 3வது முறையாக ஜோடி சேர்ந்தது. இந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆனது.
மேலும் ரிலீசான மூன்றே நாட்களிலேயே 100 கோடியை சம்பாதித்த படம் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியது. இதனால் ஹாட்ரிக் மெகா ஹிட் ஜோடி என்ற பெருமையை தீபிகா-ஷாருக் ஜோடி பெற்றுள்ளது. ஷாருக்கானுடன் சேர்ந்து தீபிகா நடித்த இந்த 3 படங்களும் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றத்துடன், தீபிகாவின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த 3 படங்களிலும் தீபிகாவின் கேரக்டர் மறக்க முடியாததாகி விட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி